மீண்டு வர!!!

உன்னைக் கண்ட
அந்த நாளிலிருந்து
எனக்கான மாற்றம்
சொல்ல என் இதழ் கூட
யோசிக்கிறது..
உண்ண மறந்து,
உறக்கம் மறந்து,
மற்றும் எல்லாம் மறந்து,
உன்னை மட்டுமே
நினைக்க வைத்த
மாயக்காரன் நீ...
நிதம் இரவு
உறக்கம் மறந்து நானிருக்க...
திட்டும் என் தாயின் குரலை
என் செவிகள் கூட
கேட்க எளிதில் அனுமதித்ததில்லை!!!
அவளுக்கு பயந்து
போர்வைக்குள் எனை மூடி,
எனக்குள் உனை மூடி,
கனவுகள் ஆயிரம் கண்ட
நாட்கள் பல...
எங்கு நோக்கினும்
உன் பிம்பம்...
எத்தனை நாள்
இந்த சிறைவாசம்...
"வலையில்" சிக்கி கொண்டிருக்கிறேன்...
ஒரு "மஞ்சள் கயிறு" கொடு
நான் மீண்டு வர!!!
11 Comments:
nee etha neanchu eludhuna nu enaku theriyadhu.......matra bhadi kavidha nalla than iruku.......ana ennamo idikidhu.......kanni aprama en kita thaniya sollu itha ellam enga irundhu suduranu.........he he he he juzzzzzzzzzz kiddin.......onaku kula unoru kanni irundhuruka paren....... yar ava la velia kondathanganu therla........ana nalla than eludhura..... enga kuda palghi epdi intha keta palakam onaku vandhuchu nu therla.......buh all r good keep going...........
Heyyyyy machiiii kalakkara!!!
Superb kavidhai! My claps for u [Clap] [Clap] [Clap] [Clap] :o)
hey kavithai touching de. keep rocking dear!!!!!!!!
kavithai yaarayo nenaiche eluthana madhiri irukku!enna matter de!tell me !
great job. Continue the good work.
Nice Kavithai..Feeling ayeduchu ma..
HI angay.. Itz really gr8 readin all ur kavidhaigal. They are all awesome. Keep up the good work. If possible.. Keep in touch as well!
kural aelutheiyae valluvanum,
kavi aelutheiyae kambanum,
paadal aelutheiyae bharathium.
ippotha irunthal unnidam paadam kattrukollvarkal
kavithai aelutha.
enndrum anbudan un annan
samy
வணக்கம்....
எந்தன் உயிர் த்தோழி ,
உன் கருத்தில் பிழை இல்லை...
கையில் தான்....
ஆங்காங்கே தமிழ் தடம்புரண்டாலும்
உன் கவிநயத்தால் தலைநிமிர்ந்திருக்கிறது...
பாழாய்ப்போன சமூகம்
பெண்ணை பாடாய்படுத்தியும் அவள் கண்ணீர் துடைக்க ,
கனவு பழிக்க,
கையில கவிதையெனும் கைக்குட்டை ஏந்திய,
உன் வீரச்செயலுக்கு
பலகோடி வணக்கங்கள்........
வாழ்க பல்லாண்டு...
பலகோடி நூற்றாண்டு...
என்றென்றும் அன்புடன்,
விக்ரம்...
"அவளுக்கு பயந்து
போர்வைக்குள் எனை மூடி,
எனக்குள் உனை மூடி,"
இந்த சொல்நடை மிகவும் அருமை...
"திட்டும் என் தாயின் குரளை
என் செவிகள் கூட
கேட்க எளிதில் அனுமதித்ததில்லை!!!
அவளுக்கு பயந்து
போர்வைக்குள் எனை மூடி,
எனக்குள் உனை மூடி,
கனவுகள் ஆயிரம் கண்ட
நாட்கள் பல..."""
Fantastic Lines..
Keep rocking angay..,
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home