Wednesday, October 18, 2017

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!

ஒரு  மாதத்திற்கு முன்பே தொடங்கும் கொண்டாட்டம்
திநகர் புரசைவாக்கம் பல்லாவரம் குரோம்பேட்
சுத்தி சுத்தி shopping பண்ண காலம்
காசு கம்மியா இருந்தாலும் கடனை உடனை வாங்கியாச்சும்
அன்னைக்கு பொழுதுக்கு தயாராக நாம பன்ற அலப்பறையே
தனி அழகு !!

முறுக்கு அதிரசம் சோமாசு ரிப்பன் பக்கோடா
ஜிலேபி குலாப் ஜாமுன் ரவா லட்டு அச்சு முறுக்கு
வாசனை வீடெல்லாம் நிரம்பி இருக்கும்
கிச்சன் ல கால் வெக்க முடியாது
பரவி கெடக்கும் பலகாரமும் எண்ண சட்டியும்

பிரிச்சு பாத்து பிரிச்சு பாத்து போர் அடிக்காத பட்டாசு ஒருபக்கம்
காலைல 9 மணிக்கு பட்டி மன்றம் இன்னொரு பக்கம்
மசாஜ் சென்டர் ஆகி போன வீடு ஒருபக்கம்
மட்டன் பிரியாணி வாசன இன்னொரு பக்கம்

10 தவுசண்ட் வாலாவா Tinல குருவி வெடியா
கொழப்பத்திலே ஒரு பக்கம் பிஜிலி count கொறையும்

ஓட்டையாகாத புது dressஓ
கங்கு படாத கன்னமோ இருக்க முடியாது

உச்சந்தலைல வெச்ச எண்ணெயும்
காலைல சாப்ட எட்டு இட்லியும்
சொர்க்கத்தையே கண்ல நிக்க வெச்சு தாலாட்டும்

இருந்தாலும் லட்சுமி வெடிய நடு ரோட்ல வெச்சா
என்னைக்கும் காலியா இருக்க ரோட்ல
அன்னைக்குத்தான் பதினெட்டு Cycleஉம்  பன்னண்டு Autoஉம்
கிராஸ் பண்ணி போகும்

பாதி மனசு டிவிலயும்
மீதி மனசு வெடிலயும் அலைபாயும்

எல்லாம் முடிஞ்சு பொழுது சாஞ்சா
Color Colorஆ பட்டாடை கொஞ்சும்
Costly வெடி கண்ண உருத்தும்

ஒரே Shotல  ஓஹோன்னானா!!!!
Correct ஆ  நேரம் பாத்து கூட்டம் பாத்து
ஒத்த வெடி வானையே அலங்கரிக்கும்

இப்போ தாண்டா "தீபாவளி" ன்னு  மனசுக்குள்ள எல்லா பூச்சியும் ரவுண்டு அடிக்கும்

வாங்கின கடனோ
வாடகை Cycle ஓ
வேலையோட அலுப்போ
வாழ்க்கையோட சலிப்போ
எல்லாமே அந்த வானவேடிக்கைல கரைஞ்சு போகும்

இதுவும் கடந்து போகும்
விடிந்ததும் பழைய வாழக்கை வந்தும்  தொலையும்!!!

ஆக இந்த ஒரு நாள் எவ்ளோ Maximum என்ஜாய் பண்ண முடியுமோ பண்ணிக்குவோம் !!!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!

அங்கயற்கண்ணி அ ச

Thursday, February 9, 2017

முற்றுப்புள்ளி!



முற்றுப்புள்ளி!

ஒருவர் அரசியல்வாதி
மற்றொருவர் ஆதிக்கவாதி

அரசியலும் ஒரு கலையே!

அரசியல் பாடம் அனுபவத்திலிருந்து வித்திடப்படும்.
அரசியல்  அறிந்தவன் அவசரம் அடைவதில்லை
அரசியல் தந்திரம் தெளிவாய் குழப்பும்
அறிந்தவனே புத்திசாலி!

நல்ல அரசியலில் மக்களுக்கு நன்மை
தீய அரசியலில் தன் மக்களுக்கு நன்மை
அது தற்காலிகமே!

அரசியலும் ஆதிக்கமும் எத்தனை போட்டியிட்டாலும்
முடிவில் அரசியலே ஆதிக்கத்தை விழுங்கும்!

.முற்றுப்புள்ளி

-அங்கயற்கண்ணி.அ.ச  

Sunday, April 14, 2013

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


கருவறையில் பயின்று...
கருத்துடன் முத்திரை பதித்து...
காற்றோடு சுவாசம் கலக்கையிலும்...
உன் அழகொன்றே உலகில்
அற்புதம் என
உரக்கச் சொல்லி மாளவில்லை!
உன் பிறவி என்றுமே எங்களுக்கு
பெருமையையும் புகழையும் அள்ளி கொடுத்தபடியே!
என் தாயினும் மேலான தமிழே!
உம்மை வணங்குகிறோம்!

அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

-அங்கையற்கன்னி அ ச

Friday, August 24, 2012

பொண்ணு பாக்க வராங்களாம்!

நானே தவழ்ந்து பழகித் துணிந்தேன்..
நானே தவறி விழுந்து மீண்டும் எழுந்தேன்..
எண்ணமும், செயலும் ஒன்றொன்றாய் என்னுள் நானே செதுக்கியவை!
பல சமயம் என்னை நான் புரிந்துகொள்ளவே தடுமாரியதுண்டு!

வேதனைகளையும், வேடிக்கைகளையும்,
அழுகைகளையும், ஆரவாரங்களையும்,
அச்சங்களையும், ஆச்சர்யங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டது இந்த உள்ளம்!
இருபது வயதுவரை நான் பயின்ற வாழ்க்கைப் பாடங்களை
இரண்டாம் பாக வாழ்க்கையில் செலுத்த
எனக்களித்த நேரம்
இருபது நிமிடம்!
ஆதாமும், ஏவாளும் ஜாதகம் பார்த்ததாய்த் தகவல் இல்லை..
கண்கள் உறவாடி காதல் பொழிய ஆண்மகனும் இல்லை..
கழுத்துவரை நீண்டு  கிடக்கின்றன  கடமைகள்..

சாஸ்த்திரங்களும், சம்பிரதாயங்களும்
சங்கடத்தை மட்டுமே பலமுறை அள்ளித் தெளிக்கின்றன..
சோற்றுக்கில்லாமல் சோர்ந்து கிடந்த வேளையிலும்
சும்மாய்க் கூட எட்டிப் பார்க்காத சொந்தம்
அன்றொரு நாள் மட்டும் ஒன்று கூடி
கேளிக்கையாய் அன்பு பாராட்டும்..
அன்று உடுத்தும் ஆடையிலும் கூட
அவர் விருப்பம் வேகமாய் விளையாடும்..
உலகின் இருபது நிமிட மவுசுக்காரர்கள்
யார் தெரியுமா?
பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டார்!

பஜ்ஜி, சொஜ்ஜியை நாம் அடுக்கி வைக்க
பவுனும், சொந்த வீடும் அவர் விரலில் கணக்காய்!
ஒரு ஜென்ம வாழ்க்கையை ஒரே  குவளைக்  காப்பிக்குள் அடக்கும்  
வேடிக்கை மனிதர்கள்!
என்னிடம் வெட்கத்தை எதிர் பார்க்கும் வேதனைக்குரிய மனிதர்களுக்கு மத்தியில்
வெப்பத்தில் தவிக்கும் இதயத்துக்கு
மௌனம் பழகிக்கொடுத்து
அதை நானும் சுமந்து கொண்டு
பொம்மலாட்ட பொம்மையாய்
சில நிமிடங்கள்!
என் சிந்தனைகள் காற்றில் சேர்த்த ஒரு குரல்..

சொல்லிவிடுமா?? உங்களுக்கு..
என் இருபது வயது வாழ்க்கையை ..
"இந்தக் கலர் புடவையும், போலிப் புன்னகையும்!"

-அங்கையற்கண்ணி

Friday, August 17, 2012

நீ யார்?

மூச்சிரைக்க ஓடி வந்தான் ...

வறண்ட தொண்டைகளில்
தோல்வி தொட நினைத்தாலும்
தொடர்ந்து ஓடிகிறான் ..
பயணத்தின் முடிவு
இறப்பாக மட்டுமே இருக்க முடியும்..
வாழ்கையிலே ..
எதை வாழ்ந்தான் என்பது மட்டுமே கேள்விகுறி!
அவனை கசக்கி எரிய ஒரு கூட்டம் !
அவனின் கால்களை முறிக்க ஒரு கும்பல்!
அவனின் தோளை தட்ட சில நட்பு !
அவனை தூக்கி பிடிக்க சில கைகள்!
அவன் பாதைகளில் முள்  விரித்து போராட்டம்!
அவன் பூக்களின் காம்புகளுக்கு ஈமச்சடங்கு!
அவனை மெண்டு விழுங்க வியாபாரம் நடக்கிறது!
அவன் கொண்ட அத்தனையையும் பொய்யாக்க போலி கூட்டம்!
காதுகளை செவிடாக்கி ,
கண்களை குருடாக்கி ,
வாய்ப்பூட்டை வலுவாக்கி ,
உணர்சிகளின் மூட்டையை முதுகில் சுமந்தபடி ..
மீண்டும் மூச்சிரைக்க ஓடுகிறான் ..
வழி மறித்து கேட்டுப்பாருங்கள் ..

நீ யார்? என்று!!!
தலை உயர்த்தி சொல்வான்
"நான் கலைஞன்" 
-அங்கையற்கண்ணி

Tuesday, August 14, 2012

அவனவனுக்கே அன்றி அடுத்தவனுக்கில்லை!!!

அடிமைத் தனம் அகண்ட நாள் எனக் கூறுகிறார்கள் !

சுதந்திர பூமி பிறந்ததென பறைசாற்றுகிறார்கள் !

நம்மை நாமே அடிமையாக்கி கொண்டு வாழ்ந்த நாட்கள் அவை..

சொந்த கூட்டுக்குள்ளே சிறைபட்ட சில ஆண்டு பறவைகள் ....

தவம் புரிந்தும் , தடை தகர்த்தும் ,

தடியடி பட்டும் , தலை உடைந்தும் ...

தாகம் தீர்ககாமல் தத்தளித்த தருணம் ...

மதங்கள் யாவும் ஒன்று சேர்ந்து ...

மனிதம் மட்டும் பரப்பி ...

மண்ணை காத்திட ..

மனங்கள் பல இணைந்தன ...

துப்பாக்கி சூட்டுக்கும் ,

தூக்கிலிடும் தூண்டலுக்கும்

துணிந்து நின்றது

இந்த இமயம் ..

இந்தியனின் இதயம் !

இனி எவனொருவன் எட்டி பார்த்தாலும் ..

எதேற்சியாய் கூட போகாது இவன் தன்மானம் ..


அவனவன் சுதந்திரம் அவனவனுக்கே அன்றி !

அடுத்தவனுக்கில்லை !!!

வாழ்க பாரதம்!

-அங்கையற்கண்ணி

Thursday, August 9, 2012

கண்ணீரையும் அளவாய் தான் கசிகிறேன்!


தனிமையில் தான் இந்த தவம்!

தவிப்புகள் என்னவோ தலைவனை நோக்கித் தான்!

திரைக்குள் மூடியபடி
...
வெயில் படா ...
உன் நிழல் கூடப் படா ...
வாழ்க்கை!

கனவுகள் தீர்ந்து போகுமோ என்னும் தவிப்பில்
கண்ணீரையும் அளவாய் தான் கசிகிறேன்!

-அங்கையர் கன்னி அ . ச.