Saturday, October 16, 2010



This is a history in my life!!! I may not be a good writer...but I can say..I am a genuine human being..My pen always wanted to write something my mind intructs...But I felt this day "28th of September 2010" my heart instructed/forced/requested my fingers to write d below...for a good cause...for "Hunger Free India Foundation". very happy to be a part of this...and best thing about this is..."I took notmore than 20 mins to complete all this"

They were used as placards, during the Human chainOn 2nd Oct 2010


Angay at her BEST ....sometimesss :-) :-)


1. பட்டினியும் இனி பறந்து போகட்டும்


2. புது உலகம் காண்போம் ..


3 பாரத தாயே ..


உன் பிள்ளைகள் அத்தனை பேருக்கும்


ஒரு வாய் ஊட்டி விடுவாயே


4 காந்தியும், பாரதியும்,


தன் தோள் தட்டி கொள்ளலாம்..


அவர் கண்ட கனவுகள்


நனவாக போவதை கண்டு..


5 சுயநலம் மறப்போம்!!


பிறர்நலம் சிறக்க


பொது நலம் புரிவோம்!!



6 பசியின் வலியே அறியாது போகட்டும்


இந்த சமுதாயம்



7 வாழ்வது ஒரு முறை ..


வாழ வைப்போம் பல தலைமுறை !!


8 ஒட்டி போன வயிறு


குழி பார்த்த கன்னம்


வெளுத்த உதடுகள்


எங்கள் உரத்த குரலை கண்டு


ஓடி ஒழியட்டும்!!



9. இருள் சூழ்ந்த உங்கள் கண்கள்


இனி அருள் சூழட்டும்!!!



10.இளைஞர்கள் இணைகிறோம்!!


இனியொரு விதி செய்கிறோம் !!



11.ஒரு கை பார்த்து விடலாம்


இந்த பட்டினி


எட்டி இனி


நம்மை பார்க்கிறதா என்று ..



12.உணவு இல்லாமல் உரக்க பேசுவது எப்படி?


உரிமை இல்லாமல் உறவு கூடுவது எப்படி?


உரக்க பேசு...


உறவு தான் நீயும் நானும்



13.விண்வெளியும்!!


கணினியும்!!


செயற்கைகோளும்!!


மட்டும் மல்ல நாட்டின் உயர்வில்


பசுமை பாரதம்!!


பசியிலா பாரதம்!!


தான் முதன்மையில்....



14 உணவை வீணாக்கி ..


உயிரை வீணாக்காதே...



15 மனித இனம்


உண்மையில் புனித இனம் ...


வாழ வைப்போம் !!


வாழ்ந்து காட்டுவோம்!!



16 சுவாசிக்கும் காற்றும் கூட


நினைவு படுத்தட்டும்


எங்கோ ஒர் மூலையில்


உனைப்போல் ஒருவன்


உணவின்றி உயிர் விடுகிறானென்று



17 பாசத்தோடு பரிமாறு


பசியில்லா இடம்பாரு


புசித்தவன் வாயும்


புகழ்ந்து தீர்க்கும்


உன் புகழ் பாடி!!


18 கை ஏந்தி நிற்கிற சிவந்த கைகளுக்கு..


ஏன் மறுக்கிறாய்???


இவன் தீர்மானித்தது அல்ல இந்த வாழ்க்கை..


நாம் தரம் இழந்ததால்


இந்த வீழக்கை


19


சொகுசு அடைவதில் சந்தோஷமா?


இல்லை பிறர் சோகம் களைவதிலா?


20


ஒவ்வொருவனும் தலைவனே ..


நின் மக்களுக்கு


சேவை செய்ய பிறந்த சேவகனும் அவனே!


21


நடத்தி காட்டுவோம் இக்கனவை !!


விரட்டி ஒட்டுவோம் பசியை !!


நம்புவோம் இந்த நிஜத்தை !!


22


பிச்சை பாத்திரமும்


அட்சய பாத்திரமாகட்டும்


23


பறவைகளுக்கு போட்டியாய் பரிமாறுவோமா????


24


பரவாயில்லை ..


கல் நெஞ்சு என்று நினைத்தேன் ..


ஆனால் கருவிலே


கருணையும் கருவுற்றிருகிறது இவர்களுக்கு ..


உதவ கரம் கொடுப்பதற்கு நன்றி ..


25


உணர்வுகளுக்குள் போராட்டமா ?


இல்லை உணவுக்காக ஆர்பாட்டமா ?


இது ஒரு அத்தியாவசிய ஆர்பாட்டதிர்கான அத்தியாயம் !!


26


மனம் சொல்லும் மொழியை கேள்


மறந்தும் கூட சொல்லாது ..


"உனக்கென்ன அக்கறை பட்டினியில் புரள்கிறவனை பார்த்து "


27


உனக்குள்ளும் ஒரு இறைவன்


இணைந்து இருக்கிறான்


"உதவ மறக்காதே"


28


பஞ்சத்தை ஒழிப்போம்!!


பகிர்ந்து வாழ நினைப்போம் !!


பட்டினிக்கு "Bye Bye"


மனித சங்கிலியில் "கை வை "


29


தூக்கி எறியும் உணவு


தூரத்து நண்பனுக்கு போகட்டுமே!


30


நம் பிள்ளைகளும் பழகி கொள்ளட்டும்..


பசியாற்றட்டும் ..


பரிமாறட்டும் ..


31


விதை ஒன்று நட்டுவிட்டோம்


இனி வியந்து போகும் இந்த வரலாறும் ..


32


கல்வியும் ..


கால் வயிறு கஞ்சியும் ..


கடைசி வரை கட்டாய தேவை ...


33


லஞ்சத்தை மட்டுமல்ல ..


பஞ்சத்தையும் ஒழிப்போம் ..

2 Comments:

At October 16, 2010 at 10:45 AM , Anonymous Badri said...

Wow it is, Angay :)
Esp:
தூக்கி எறியும் உணவு
தூரத்து நண்பனுக்கு போகட்டுமே!
Wonderful!

இனி ஒரு இனி ஒரு விதி செய்வோம்
விதியினை மாற்றும் விதி செய்வோம் (Courtesy: Ayutha ezhuthu :) )

 
At October 18, 2010 at 11:02 PM , Blogger Jay said...

Super

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home