Monday, October 18, 2010

தோழியின் பிறந்த நாளுக்கு!!



இன்று தேதி பதினெட்டு!!
நீ என்றும் ஒரு அழகான மொட்டு!!

நட்பிற்கு இலக்கணம்..
அன்பிற்கு அடித்தளம்........


இனிமையான உந்தன் குரல்!
OC Guitar இல் பதித்த உன் விரல்!

விழிகளின் காந்தம்!
உன் முகத்தில் உள்ள சா சா சா சாந்தம் :P

இந்த முப்பதாவது பிறந்த நாளை (:P)..
முழுதாக கழித்து விடு!!!

இன்னும் முன்னூறு ஆண்டுகள்
நீ வாழ போகிற வாழ்க்கைக்கு..
ஒப்பந்தம் போட்டு விடு!

கனவுகள் கொந்தளிக்கும்
உன் கலை கூட்டுக்குள்..
கவிதைகள் ஆயிரம் கலந்து போகட்டும்!!

நீ நேசிப்பது, நீ சுவாசிப்பது, நீ யாசிப்பது
எல்லாம் உனக்கே உனக்காய்...
தம்பட்டும் அடித்து கொண்டு....
தானே வரட்டும்...
உன்னை தேடி வரட்டும்!!
பாராட்டுகள் உனக்கு கோடி வரட்டும்!!

ஆயிரம் இருப்பினும்...
நீ என் ஆருயிர் தோழியடி!!!

உன்மேல் எனக்குள்ள உரிமையில்..
உரக்க உரைக்கிறேன் ஒரு முறை!!!

உறுதியாய் இரு!!
உயர போகும் உன் வாழ்க்கைக்கு....

உள்ளத்தடியிருளிருந்து  என் பாராட்டுகள்!!!

ஆனந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

உண்மை அன்புடன்
உன் தோழி,
அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home