தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தித்திக்கும் தீபாவளி
தினசரி ஒலி அல்ல இது..
புது
தினுசான ஒலி!!!
...பிறக்கும் ஒவ்வொரு புது வருடத்திர்க்கும்..
புது காலேண்டரில் விரல் பதிக்கும் போதும்..
நம் அகண்ட கண்கள்
காண விழைவது???
என்று இந்த தீபாவளி?
பல பலக்கும் ஆடை
பட பட பட்டாசு...
பலவகை பலகாரங்கள்..
பகிர்ந்து உன்ன
பக்கத்திலேயே உறவினர்களும் நண்பர்களும்..
எப்படி இனிக்காமல் போகும்,,,,
இந்த அற்புத திருநாள்..
பத்த வைக்கும்
ஒவ்வொரு
பட்டாசும்...
பல கோடி பட்டாம்பூச்சிகளை பரக்கசொல்லும்
ஆனந்தத்தில்..
மஞ்சள் சிறிது தடவி...
ஆடை எடுத்து உடுத்தும் தருணம்...
கம்பீரமும்.....அழகும்..
தானே....ஒட்டி கொள்ளும்...
உடம்பெல்லாம்...
குப்பையே பிடிக்காத நமக்கு
அன்று ஒரு நாள்...
வீட்டின் முன்....
கட்டாயமாக..நம் வீட்டின் முன்...
குப்பை இருந்தால்..
அன்று கோலாகலமான தீபாவளி தான்..
நட்சத்திரங்களை ஒரு நொடி ஒதுக்கி வைத்து..
வான வேடிக்கையை வியந்து பார்ப்பது..
வயது 90 ஆனாலும் தொடருமோ??????
நரகாசுரனுக்கும் நன்றி......
நீ நல்லவனாய் இருந்திருந்தால்....
கிருஷ்ணனுக்கும் வேலை இல்லை...
பள்ளி அலுவலகத்துக்கும் விடுமுறை இல்லை...
இல்லங்கள் இனிக்கட்டும்!!!
இதயம் இனி பறக்கட்டும்!!!
இசை நம்முல் மூழ்கட்டும்!!!
இன்பமே வாழ்வை சூழட்டும்!!!
புன்னகை புரியுங்கள்........
ஒவ்வொரு நாளும்
புதுமை காணுங்கள்...
ஆனந்தமாய் கொண்டாடுங்கள்
இந்த அழகு தீபாவளியை....
அங்கயர்கன்னியின்....அன்பு தீபாவளி நல வாழ்த்துக்கள்!!!!! :-) :-)
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home