
30 வருட பயணம்...
பல விஷயங்களை கற்றுதந்துள்ளது
பல கனவுகளை நனவாக்கியுள்ளது
பல இளைங்கர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது
பல நெஞ்சங்களை உருக்கியிருக்கிறது
...பல வீடுகளுக்கு விடியலாய் இருந்துள்ளது
பல மனங்களுக்கு ஆறுதலாய் இருந்திருக்கிறது..
பெருமை பட்டு கொள்ளலாம்..
உம் பிறவியும்..
உலகுக்கு உயிரூட்டுகிறது..
பாரத தாயின் அற்புத புதல்வன்!!!
தீபரமனியின் ஆசை மகன்!!!!
புவி ஆள..
தெரியாத தலைவர்களிடம்
திமிராய் கூட சொல்லி கொள்ளுங்கள்!
"நான் இருக்கிறேன்" என்று...
நிஜங்கள் நடக்கட்டும்!
கனவுகள் புதுமை பெறட்டும்!!!
பல கண்ணீருக்கும் பதில் கிடைக்கட்டும்...
கேள்விக்குறி ஆகி போன வாழ்வில்
கேட்டும் கேட்காமல் இருக்கும்
இந்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில்..
சாதாரண..
சராசரியான ஒருவன்..
சப்தமே இல்லாமல்...
சபைக்கு வருகிறான் என்றால்..
சந்தோஷம்..எம் போன்ற மக்களுக்கு..
நாளை பொழுது விடியாமலே போகட்டும்
என்று எண்ணுகிற எத்தனையோ ஜீவன்களுக்கு
எதார்த்தமாய் கற்றுக்கொடுங்கள்..
இது தான் வாழ்க்கை..
இவ்வளவு தான் வாழ்க்கை...
இப்படி தான் இந்த வாழ்க்கை என்று...
புரிந்து கொள்வார்கள்..
இவ்வளவு அழகானதா?
இந்த வாழ்க்கை என்று..
பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..........
எங்கள் அனைவரின் அன்பும் அரவணைப்பும்..
என்றும் உங்களுக்கு இருக்கும்......
இனி ஒரு விதி செய்வோம்!!
-அங்கயற்கண்ணி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home