Wednesday, February 9, 2011

என்றும் காதலில் நான்!!!





ஒரு மதியவேளை
நான் உணர்ந்திருக்கிறேன்
என் காதலை..

ஏழு வயதில் அரும்பிய என்
முதல் காதலை..

என்னை அறியாமல்
இசைக்கு இயங்கிய என் கால்களை
காதலித்திருக்கிறேன்...

வகுப்பறை மேஜையில்
தோழியின் பெயரை
கிறுக்கிய தருணத்தில்
காதலித்திருக்கிறேன்...

தமிழுடன் தத்தளித்து
மேடைகளில் பேசுகையில்...
பாராட்டுகள் குவிந்து
நிஜங்களை நிரப்புகையில்...
அந்த
மறக்க முடியாத
சில நிமிடங்களை
காதலித்திருக்கிறேன்...

கிரீடமாக இருக்கட்டும்
கிழிந்த புடவையாக இருக்கட்டும்...
நடிக்கச்சொல்லி தூண்டுகையில்..
நடிப்புக்குள் நகர்ந்து
நவரசம் பிடித்து
நாலாப்புறமும் மக்கள் வியக்கையில்..
என் கன்னங்களை தழுவிய
கண்ணீரை
காதலித்திருக்கிறேன்...

எண்ணங்களுக்கு வடிவுகொடுத்து
விரல்களுக்கு வலைவுகொடுத்து
காகிதங்களுக்கு வரிகள்கொடுத்து
எழுத்துக்களுக்கு உயிர்கொடுக்கையில்
என்
கவிதையையும்
காதலித்திருக்கிறேன்...

நான் காதல் வலையில்
சிக்கித் தவிக்கும் பூச்சி அல்ல..

காதல் வலையில் பயணிக்கிற சிலந்தி...

என் பிறப்புக்குள்ளே
காதல் பிறந்திருக்கிறது...

என்னை பார்த்து கேட்கின்றனர்

24 வயது உனக்கு...
நீ யாரையும் காதலிக்கவில்லையா ????
என்று.....

உண்மை காதல் உருண்டு
உலகக்கடைசியில்
விழுந்ததாய் ஒரு எண்ணம்...

திடீரென
ஒரு தெளிவு...

இத்தனை நாள் நான் காதலித்தது
"என்னை" தான்

இப்பொழுதும் கூட
காதலிக்க தயார்...

"என்னை" காதலிப்பவனை!!!

உண்மை காதலுடன்,
அங்கயற்கண்ணி

2 Comments:

At February 9, 2011 at 1:30 AM , Blogger PRAVEEN said...

hey really awesome :)itha padichathan yennakkum theriyuthu naanum yennai romba luv pandren nu....u made others to think how much they luv themselves & i luv it :)

 
At July 22, 2011 at 6:22 AM , Blogger guru said...

வகுப்பறை மேஜையில்
தோழியின் பெயரை
கிறுக்கிய தருணத்தில்
காதலித்திருக்கிறேன்..
awesome lines that shows your deep friendship

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home