தனிமையில் ஒரு குரல்!!!

காக்கைக்கும் குருவிக்கும் கூட
கூடி வாழுகிற பாக்கியம் தான்...
கண்ணீர் ஒன்று தான் என்றாலும்
வடிகிற கண்கள் வெவ்வேறு!
நான் யாருமில்லா
பாலைவனத்தில்
தள்ளப்படவில்லை...
ஓட்டுனர் இல்லா பேருந்தில்
பயணிக்கவில்லை...
ஆனால்..
தனிமை என்னை தவறாய்
புரிந்து கொண்டது...
தாள்களில் எழுதப்படுகிற வார்த்தைகள்
மறைந்துபோகின்றன...
என் ஓவியத்தின் வண்ணங்கள்
அழிந்துவிட்டன...
தனிமையை நாடினேன்...
தனிமையை நேசித்தேன்...
தனிமையை பழகினேன்...
இன்று
தனிமையில் தத்தளிக்கிறேன்...
கோடி மக்கள் குவிந்திருப்பினும்
தனிமை என்னை தாக்குகிறது...
நான் வாழத்தெரியாது போகிறவளா?
இல்லை
வாழ்வை இழந்து வாழ்கிரவளா?
கேள்விக்குறி என்கிற
வளைந்த கம்பியில் மட்டும் பயணிக்கிற
கம்பிளி பூச்சியானேன்...
வினாக்களுக்குள் விடைத் தேடி தேடி
வீசுகின்ற காற்றைக்கூட
சுவாசிக்காது போனேன்...
என் கைப்பிடித்து சென்ற கற்பனைகளை
கை கழுவி விட்ட பாவி நானே தான்...
வட்டத்துக்குள் வட்டமிட்டு
சுருக்கிகொள்கிறேன் வாழ்க்கையை...
எனக்கு
நானே தோழி!!!
நானே எதிரி!!!
எல்லாம் புளித்துப்போன எனக்கு
தனிமையும் புளித்து போனது...
தனிமையில் தவிப்பதால் தான்
சூரியனும் கொந்தளிக்கிரானோ என்னவோ???
தனிமை என்னை தழுவியிருக்கிறது...
கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கும்
எனக்கும்
என்ன பெரிய வித்தியாசம்...
பறந்து விரிந்து கிடக்கிறது பூமி
இருந்தும்...
கூன்டின்றி அடைப்பட்ட இந்தப் பிறவி
கிறுக்கி கொண்டிருக்கிறது
தனிமையில்...
உங்கள் தோழி,
அங்கயற்கண்ணி
1 Comments:
super mam i feel that all lines in my life
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home