Sunday, November 14, 2010

குழந்தைகள் தினம்!!!


அழுகையிலும்...அதிரடியிலும்
அனைத்திலும்..
அழகு ததும்பும்..கோலம்..
குழந்தைகளின்..குறும்பு!!!

அப்பாவின் விரல் பிடித்து
நடக்கையிலும்..
அம்மாவிடம் வாங்கிய அடி
வலிக்கையிலும்..
செய்ததெல்லாம்..ஒன்றே ஒன்று...

கள்ளம் கபடமில்லா உணர்வின்... ஒட்டு மொத்தம்..

பள்ளிகூடமாக இருக்கட்டும்..
பட்டறையில் வேலையாக இருக்கட்டும்..
பகல் கனவு காண்பதில்..
பரம சந்தோஷம்...

"குழந்தையும் தெய்வமும் ஒன்று!!!"
படித்துள்ளோம் பல முறை,,

ஆயினும்
ஏனோ தெரியவில்லை.
இந்த தெய்வங்களுக்கு தான் நிறைய சோதனை!

பள்ளிகூடங்களிலும், பட்டாசு தொழிலிலும், பத்து பாத்திரத்திலும்..
பஞ்சர் ஒட்டுகையிலும்..


நேரு வே தெரியாத...
குழந்தைகளுக்கு..
எப்படி புரிய வைப்போம்..
இன்று குழந்தைகள் தினம் என்று...


நாம் கொண்டாட்டங்களுக்கு கொடி பிடிக்க தயார்..
அதே சமயத்தில்
பலரின் திண்டாட்டத்துக்கும் முடிவெடுக்க தயாரா நாம்?

இறைவன் படைத்த படைப்பில்..
அருமையானது
குழந்தை பருவம்!!

குறையில்லாத..குற்றமற்ற உள்ளத்தின் உறைவிடம்..

நீயும் நானும் ..
நாட்கள் நகர்ந்து நகர்ந்து நாடு தாண்டி போனாலும்..
மறக்காத பருவம்
குழந்தை பருவம்..

இனி பிறக்காத பருவம்..
நாம் ..
கடந்து வந்த
குழந்தை பருவம்...

குழந்தைகளே...
அறிவு தனை அள்ளி பருகுங்கள்..
ஆசை தனை அனைத்து கொள்ளுங்கள்..
உரிமையை உரக்க கேளுங்கள்..
ஓடி விளையாட ஒரு நாளும் மரவாதீர்கள்..
என்றும் எங்கள் செல்ல பிள்ளைகளே என்பதை உணருங்கள்..
இதோ ஒரு முத்தம்!
அன்போடு வாங்கி கொள்ளுங்கள்!!!

குழந்தைகள் தின நல வாழ்த்துக்கள்!
-அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home