அதென்ன இரவில் மட்டும் வளம் வருகிறாய்!!!

அதென்ன இரவில் மட்டும் வளம் வருகிறாய்!!!
காற்றோடு கதைப் பேசிக்கொண்டிருக்கும் நள்ளிரவில்
தினம்காதலோடு வருகிறாய்!!!
(ஹ்ம்ம் ...யார் அங்கே!!)
ஒவ்வொரு முறையும் உன் முகம் பார்க்க முயல்கிறபோதெல்லாம் தேகத்தின் ஏதோ ஓர் நரம்பை
உரசுகிறது உன் காற்று!!!
கூச்சத்தில் சுருண்டவுடன்
நாணங்கள் நடனமாடத் தொடங்குகின்றன!!
நான் புலவி அல்ல..
வெறும் கிறுக்கி.
உன் காதலை......
முகமறியா உன் காதலைகட்டிக்கொண்ட கிறுக்கி!!
தலைமுடி தனை தலைவன் நீ
தாய்த்தமிழ்க் கொண்டு
தினம் தடவிக் கொடுக்க...
தவழ்ந்து செல்லும் பிள்ளையாய்
தடுமாறி நானும் தத்தளிக்க..
பரபரப்புகளோடு சில நொடி..
தலையனைக்குள் தொலைகிற பத்து நொடி!!!
பின்...மௌனம்...
காற்றும் கடைபிடிக்கும் சில நொடி மௌனம்..
அலறல் சத்தத்தில் அலறியபடி
கால நேரம் தெறியாத கடிகாரத்தை கரித்துக்கொட்டியபடி..
விடிகிறது இரவு!!!
மறைகிறது கனவு!!!
நாளை சந்திக்கிறேன்...
-அங்கையற்கண்ணி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home