மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!!!

பெண்கள்!!
அழகான கிறுக்கல்...
அமைதியான அலை...
அவசரமில்லா கடிகாரம்...
இவள் நடந்த செல்கிற பாதையில்
நாட்டியமாடிக்கொண்டிருக்கும் மணல்கள்...
இவள் கோலமிட்ட புள்ளிகள்
ஒன்றுக்கொன்று முறைத்துக் கொள்ளும்...
இவள் கூந்தல் ஏறிய பூக்களும்
அன்றே பூத்ததாய் புரளி பேசும்...
இவள் பாதம் சென்ற சலங்கையும்
பணிவாய் பரதம் பழகும்...
இவள் நேர் வகுடுக்குள் எத்தனை
மர்மம் மறைந்துள்ளதோ?
இவள் கருவிழிகளில் தான் காந்தம்
உற்பத்தி ஆகுதோ?
கடற்கரை காற்றும் கைதட்டி அழைக்கும்
கரைகளில் கால் நனைத்து போ!! என கேட்க்கும்...
இவள் கடித்து துப்பிய நகங்கள்
தரையில் புரண்டு அழுததாம்!!!
உடனே பார்த்து சொன்னதாம்!!!
தவறாய் எல்லை மீறிவிட்டேன்
தண்டிக்காதே என!
இவள்...
தனி உரிமை..
தடுக்கி விழுகையில் தாங்கி பிடிக்கும் கை...
நோயின் உடனடி சிகிச்சை..
இவள்...
உணர்வுகளின் உதிரம்
உயிர்வாழும் ஓவியம்!!!
மகளிர் தின நல வாழ்த்துக்கள்!!!
பெண்ணாய் பிறந்ததில் பெருமிதமே!!
-அங்கயற்கண்ணி
1 Comments:
Great lines.. My belated Women's Day Wishes!
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home