இசையில் இளையராஜா!!

கருவுக்குள் பாய்ச்சியிருக்கிறது ஒரு காந்தம்..
அன்றே காதல் வயப்பட்டதாய் ஒரு செய்தி..
இசையொன்றே உம்மை பூமிக்கு இழுத்து வந்தது..
இறைவனே இறக்கி வைத்தான் உம்மை இத்தமிழ் மண்ணில்...
தமிழருந்தி, இசை சுவாசித்து வளர்ந்த மகன்..
கலைமகளிடம் இசைப்பயின்ற தவப்புதல்வன்...
ஏழு ஸ்வரங்களும்
எல்லா வகையிலும் உமக்குள் ஏறிப்போய்..
அடம்பபிடித்தபடி அமர்ந்ந்துகொண்டதோ..
"நாங்கள் இங்கு மிக்க நலம்" என்று...
சுவாசித்ததை வாசித்து...
வார்த்தைகளுக்கு மையிட்டு...
இளமை ஊற்றி வளர்த்த இசை..
இன்று இமயத்தின் இடுக்கிலும்
கர்வமாய் உம் கதை பேசும்..
பாரதிக்கு தலைப்பாகையாம்...
காந்திக்கு கைத்தடியாம்...
உம் புன்னகைக்கே பலகோடி இசையாம்..
எம் ஜீவனை தொட்ட ஒரே சக்தி...
எம் காதலையும் எழுப்பிய ஒரு யுக்தி...
உம் இசையில் கல் உப்பாய் கரைந்து போன கருங்கற்கள் நாங்கள்...
என் மூலையில் எங்கோ ஒர் யோசனை...
இறைவனே தவமிருந்து இறக்கி வைத்தானோ இந்த இசையை..
"இதைவிட இப்போக்கிஷம் இருக்க இடமேது இவ்வுலகில்..
இருக்கட்டும் "இளையராஜா"வின் இதயத்தில்"..என்று
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...
இசை வெள்ளத்தில் மூழ்கியபடி,
அங்கயற்கண்ணி
For----------> The Maestro - Ilayaraja!!
Happy B'day!!! Long Live :-)
1 Comments:
அருமையான வரிகள்..
இளையராஜாவின் ரசிகையின் பார்வைக்கு http://rajarasigan.blogspot.com/
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home