Wednesday, November 17, 2010

தலைப்பு எதற்கு? செய்தியை படியும்!


உணர்வுகளும் உதிரமும்..
ஒன்றையொன்று உரசிகொள்ளும்...

மனிதர்கள் நாம்..
உயர்ந்தவர்
இதை உணர்ந்தவர்..

இன்று வரை...
நான் எழுப்பிய ஒரே கேள்வி..
எப்படி முளைத்ததிது??
யார் கருவில் பிரந்ததிது?
எவர் மனதில் வளர்ந்ததிது?

பல நூறு ஆண்டுகள்...
வாழ்வதற்கு..
இவன் ஒன்றும் மார்கண்டேயன் அல்ல..

மனிதர்களுக்குள்பிளவு ஏற்படுத்தும்..
இந்த கொடிய மகனுக்கு.
கொடி எதற்கு?
பல நிறம் தான் எதற்கு?

பசி போக்க உணவும்.
அரவணைக்க அன்பும்..
அதிகபட்சம் நமக்கு...

வேண்டா விருந்தாளி இவன்..
விரட்டி அடிப்பதில்
தவறேது?

நூற்றாண்டுகள் பல கடந்தும்..
நம்மை நோகடிக்கிற இவன்..
கடக்கவில்லை இன்னும்..

பணமும், பதவியும்..
பல இருந்தும்..
பற்றி கொண்டே வருகிறான்..
படுக்க வைத்த பின்பும்..

அன்பை நேசிப்போம்..
அன்பை சுவாசிப்போம்..
அன்பை பரிமாறுவோம்..
அன்பிலே மூழ்கிடுவோம்...

இயற்கையை மீறுகிற நியதி..
மக்களை பிளவு படுத்துகிற பாதி..
நம் அறியாமையின் மீதி....
இனியும் தேவயா??
இந்த சாதி??????

இன்னும் பதில் கிட்டா ஒரே கேள்வி!!!-
அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home