Sunday, December 26, 2010

அழகும் நீயே!! அழிவும் நீயே!!




I wrote this on 19th Mar 2005..for a (Spot)creative writing competition in college...and WON!!!

Thought I shud share this to u all!!!


சலசலத்த அலை
சிலு சிலுத்த காற்று
கையிலே சுண்டல் ஏந்தி
கரையோரம் நடந்து சென்ற நாட்கள் கண்முன் நிற்கிறது

ஞாயிறு விடுமுறையை ஆவலோட எதிர் நோக்கும் கண்கள்...
மணல் குவித்து விளையாடுவது
ஐந்தில் மட்டுமல்ல
ஐமபதிலும் தொடர்கிறது...

ஒ கடலே!
ஆசையாய் பார்த்த நீ அவேசப்பட்டதை நினைத்தால்
நெஞ்சம் பதறுகிறது..

உப்பு வாடை வீசிய உன் இடத்தில
மனித பிணங்களின் வாடையா?

உன் தண்ணீர் பெருக்கத்தால்
எம் கண்ணீர் வற்றியது.

மண் ஆசை பொன் ஆசை
மனிதனுக்கு தான் எண்ணினோம்..
கடலே உனக்குமா?

உயிர் பலி என்றால்..
உனக்கு உற்சாகமா?

பிஞ்சு குழந்தையை பார்த்த பின்னும் கூட
உன் நெஞ்சம் பதைக்கவில்லையா?

நிறை மாத கர்ப்பிணியை கண்டும் கூட
உன் நிலை மாறியதோ?

அம்மா அம்மா என்று அலறிய போது
உன் காதுகள் அடைத்து போனதோ?

உன் அலையின் சாகசத்தை கண்டு ரசிக்கிரோம்
என எண்ணினையோ?

திருதிக்கொள்..
உன் சாவகசமே வேண்டாம் என ஒதுங்குகிறோம்!

லட்ச உயிரை விழுங்கிய உன்னை
நிச்சயம் ஒரு காலமும் மறக்க முடியாது..

காதலுக்கும், வேடிக்கைக்கும், குதூகலத்திர்க்கும்
இடமளித்த நீ - இன்று
கல்லறைக்கும் இடம் தருகிறாய்!!!

சில்லாய் போன எம் மக்களை பார்த்து
சிரத்து போனது எம் நெஞ்சம்..

பல உயிரை பறிப்பினும்
பல இதயங்களை ஓட்ட வைத்த பெருமை
உனக்கே ஆயிற்று..

அலைகடலே!
நீ சிறு அலையாகவே இரு..
இல்லை எங்கள் அன்பிலே...
நாங்கள்
அணை போட்டு கொள்கிறோம்!


- அங்கயற்கண்ணி

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home