Happy B'day JESUS!!

கிறிஸ்து பிறந்த நாள் இது..
அற்புத குழந்தை அவதரித்த தேதி இது..
பைபிள் படித்திருக்கிறேன் சிலமுறை..
அதன் வரிகளால் தாக்கபட்டிருக்கிறேன் பலமுறை..
மதம் என்ற வட்டத்துக்குள் சூழ்பவள் இல்லை நான்..
மனிதம் என்ற காற்றை சுவாசிப்பவள் நான்..
ஏசு வாழவே 33 வருடம் தான் கொடுத்திருக்கிறது இந்த உலகம்..
அவர் பயணத்தை பதிய வைத்து சென்றார் நம் மனதில்...
நம் பாவங்களை சுமந்த பரமாத்மா..
பாவிகளையும் மன்னிப்பது தான் இவர் ஆத்மா..
கல்லறையில் கல்லடி பட்டபோதும்..
கவனம் தவறவில்லை புன்னகை புரிய...
ஆண்டுகள் ஓடி கொண்டே இருக்கிறது..
உம் அன்பு வலை நீண்டு கொண்டே இருக்கிறது..
உம் பிறவியும் பிடிக்கும்..
பிறந்த பயனும் பிடிக்கும்..
நாங்கள் அன்பை போர்த்திகொண்டு உறங்குபவர்கள்..
அன்புக்கே போர்வையாய் இருப்பவர் நீங்கள்.
நான் அன்பை காதலிப்பவள்..
அதனால் தான் ..இந்த நேசம் இன்னும் நசுங்காமல் இருக்கிறது..
எங்கள் புன்னகையையும் பூரிப்பையும்
புது பூக்களோடும், பலகாரங்களோடும்..
பாசம் கலந்து ஊட்டுகிறோம்..
இந்த சிசு பிறந்து நாளை..
இன்னும் சிறப்பாய் ..காட்டிகொண்டே
கொண்டாடிகொனடே தான் இருபோம்..
மனதுக்குள் மௌனமாய் குடியுருக்கும் உங்களை..
மண்டியிட்டு வணங்குகிறோம்..
வாழ்த்துகிறோம்..
அற்புத குழந்தையே..
அன்பின் உறைவிடமே..
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
-அங்கயற்கண்ணி
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home