Sunday, February 13, 2011

கண்கள் வெறும் கருவி தான்!!!

கண்கள் வெறும் கருவி தான்!!!

உள்ளத்துமூட்டை உரசப்பட்டு
சட்டென உடையப்பட்டு
கசிந்து வரும் தண்ணீர்...
...கண்ணிலே கண்ணீர்!!!

எது உணர்த்த முடியும்?
ஒருவனின் உள்ளுணர்வை...
இதைவிட துல்லியமாக...

முதல் கண்ணீர், முதலை கண்ணீர்,
அனுபவக் கண்ணீர், ஆனந்தக் கண்ணீர்,
பெருமிதக் கண்ணீர், பேர்சொல்லாக் கண்ணீர்...

அழுகையில் ஆனந்தம் தேடுவோர்
இங்கு அதிகம்!!
அழுகையுடன் அன்றாடம் வாழ்க்கை நடத்துவோர்
அநேகம்...

அழுகை..
அர்த்தமுள்ளது...
அந்தரங்கம் அறிந்தது..

அழுது பார்
அழுகையின் அவலம் புரியும்
அதை ரசித்துப் பார்
மறுமுறை அழுதிடத் தோன்றும்!!!

-அங்கயற்கண்ணி

காதலர் தினமாமே!!! :-) :-)

கற்பனையின் இடுக்கில் கட்டப்பட்டு
"காதல்" எனும் சொல்லைத் தொலைவில் மட்டும் சந்தித்து
தனிமை வாசலின் வாசற்க்கதவின் பின்புறம் நின்று
ஒரு ஓட்டையின் வழியாய் வீதியைப் பார்த்தேன்

குறுகியப் பாதை
எதிரிலே ஒரு வீடு
இரண்டு சைக்கிள்
இவ்வளவு தானா உலகம்?

கண்ணாடியில் கூறிய ஆயிரம் விஷயங்களில்
இரண்டையாவது "இவனிடம்" கூறியிருக்கலாம்...
கற்பனையில் கடந்த பாதையைக் காண
ஒருமுறையேனும்
வாசற்கதவை உடைத் தெரிந்திருக்கலாம்...
இறைவன் வகுத்த இலக்கணத்தை
இன்னுமொருமுறை புரட்டியிருந்திருக்கலாம்...

காற்றுக்கு அசைகிற மரங்களும்
சிணுங்கத் துடிக்கிற தொட்டாஞ்சினுங்கியும்
காற்றிழுத்து இசைக்கிற புல்லாங்குழலும்
உணர்தலின் மொழியை உணர்ந்திருக்கையில்...

நான் மட்டும் எதற்கு அந்தப் படிக்கட்டில் தனியொருவளாய்
வானத்தை பார்த்தபடி?

போதும் இந்த வெறுமை!!!
ஆட்டிப்படைக்கும் தனிமை!!!
"தான்" என்ற பெருமை!!!
இருக்கட்டுமே இன்னொரு உரிமை...

ஓரமாய் மனதுக்குள் ஒலிக்கிறது
ஒரு ஓசை!!!

எங்கேயோ??? எப்பொழுதோ??? கேட்ட வரிகள்...

காதல்-> பெண்களை இன்னும் அழகாக்குமாமே!!!!

அதையும் தான் பார்கலாமே!!! :P :P

-அங்கயற்கண்ணி



********Love U Mother Nature************

Happy Valentines Day!!!!!

Wednesday, February 9, 2011

தனிமையில் ஒரு குரல்!!!


காக்கைக்கும் குருவிக்கும் கூட

கூடி வாழுகிற பாக்கியம் தான்...

கண்ணீர் ஒன்று தான் என்றாலும்
வடிகிற கண்கள் வெவ்வேறு!

நான் யாருமில்லா
பாலைவனத்தில்
தள்ளப்படவில்லை...

ஓட்டுனர் இல்லா பேருந்தில்
பயணிக்கவில்லை...

ஆனால்..
தனிமை என்னை தவறாய்
புரிந்து கொண்டது...

தாள்களில் எழுதப்படுகிற வார்த்தைகள்
மறைந்துபோகின்றன...

என் ஓவியத்தின் வண்ணங்கள்
அழிந்துவிட்டன...

தனிமையை நாடினேன்...
தனிமையை நேசித்தேன்...
தனிமையை பழகினேன்...

இன்று
தனிமையில் தத்தளிக்கிறேன்...

கோடி மக்கள் குவிந்திருப்பினும்
தனிமை என்னை தாக்குகிறது...

நான் வாழத்தெரியாது போகிறவளா?
இல்லை
வாழ்வை இழந்து வாழ்கிரவளா?

கேள்விக்குறி என்கிற
வளைந்த கம்பியில் மட்டும் பயணிக்கிற
கம்பிளி பூச்சியானேன்...

வினாக்களுக்குள் விடைத் தேடி தேடி
வீசுகின்ற காற்றைக்கூட
சுவாசிக்காது போனேன்...

என் கைப்பிடித்து சென்ற கற்பனைகளை
கை கழுவி விட்ட பாவி நானே தான்...

வட்டத்துக்குள் வட்டமிட்டு
சுருக்கிகொள்கிறேன் வாழ்க்கையை...

எனக்கு
நானே தோழி!!!
நானே எதிரி!!!

எல்லாம் புளித்துப்போன எனக்கு
தனிமையும் புளித்து போனது...

தனிமையில் தவிப்பதால் தான்
சூரியனும் கொந்தளிக்கிரானோ என்னவோ???

தனிமை என்னை தழுவியிருக்கிறது...

கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்கும்
எனக்கும்
என்ன பெரிய வித்தியாசம்...

பறந்து விரிந்து கிடக்கிறது பூமி
இருந்தும்...
கூன்டின்றி அடைப்பட்ட இந்தப் பிறவி
கிறுக்கி கொண்டிருக்கிறது
தனிமையில்...

உங்கள் தோழி,
அங்கயற்கண்ணி


என்றும் காதலில் நான்!!!





ஒரு மதியவேளை
நான் உணர்ந்திருக்கிறேன்
என் காதலை..

ஏழு வயதில் அரும்பிய என்
முதல் காதலை..

என்னை அறியாமல்
இசைக்கு இயங்கிய என் கால்களை
காதலித்திருக்கிறேன்...

வகுப்பறை மேஜையில்
தோழியின் பெயரை
கிறுக்கிய தருணத்தில்
காதலித்திருக்கிறேன்...

தமிழுடன் தத்தளித்து
மேடைகளில் பேசுகையில்...
பாராட்டுகள் குவிந்து
நிஜங்களை நிரப்புகையில்...
அந்த
மறக்க முடியாத
சில நிமிடங்களை
காதலித்திருக்கிறேன்...

கிரீடமாக இருக்கட்டும்
கிழிந்த புடவையாக இருக்கட்டும்...
நடிக்கச்சொல்லி தூண்டுகையில்..
நடிப்புக்குள் நகர்ந்து
நவரசம் பிடித்து
நாலாப்புறமும் மக்கள் வியக்கையில்..
என் கன்னங்களை தழுவிய
கண்ணீரை
காதலித்திருக்கிறேன்...

எண்ணங்களுக்கு வடிவுகொடுத்து
விரல்களுக்கு வலைவுகொடுத்து
காகிதங்களுக்கு வரிகள்கொடுத்து
எழுத்துக்களுக்கு உயிர்கொடுக்கையில்
என்
கவிதையையும்
காதலித்திருக்கிறேன்...

நான் காதல் வலையில்
சிக்கித் தவிக்கும் பூச்சி அல்ல..

காதல் வலையில் பயணிக்கிற சிலந்தி...

என் பிறப்புக்குள்ளே
காதல் பிறந்திருக்கிறது...

என்னை பார்த்து கேட்கின்றனர்

24 வயது உனக்கு...
நீ யாரையும் காதலிக்கவில்லையா ????
என்று.....

உண்மை காதல் உருண்டு
உலகக்கடைசியில்
விழுந்ததாய் ஒரு எண்ணம்...

திடீரென
ஒரு தெளிவு...

இத்தனை நாள் நான் காதலித்தது
"என்னை" தான்

இப்பொழுதும் கூட
காதலிக்க தயார்...

"என்னை" காதலிப்பவனை!!!

உண்மை காதலுடன்,
அங்கயற்கண்ணி

Friday, February 4, 2011

இம்சை!!!

இரவுகளிலும் உன் இம்சை
இலக்கணமறியா கனவுகளாய்!!!

-அங்கயற்கண்ணி