Tuesday, April 12, 2011

தேர்தல் அறிக்கை!!!!



ஐந்தாண்டுக்கு ஒருமுறை
ஐயத்தில் நாம்!!!
நாய்களாய் தூக்கிஎறியப்பட்டிருந்தோம்...
இன்று இந்த நாடகத்தில் நமக்குமொரு கதாபாத்திரம்...

என்றோ வருகிற சுனாமியைப் போல்
------------- சூரியக்ரகனத்தைப் போல்
------------- சூப்பர் ஸ்டார் படத்தைப் போல்
இந்த நாட்களில் மட்டும் மாற்றங்களுக்கு
மாறாப்பு......

குடி தண்ணீருக்கும், குடிசை ஓட்டைக்கும்
குப்புறப்படுத்து புரண்டுபார்த்தும்
கூடி வந்ததில்லை ஒரு விரல் கூட...

இன்று கைகள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து
விருந்தளிக்க விரைந்துவிட்டன...

அதெப்படி வருகிறது இந்த பாசமும் நேசமும்
பரீட்சை அறையில் மட்டும்!???!!???

இத்தனை நாட்கள் பெண்கள் கர்ப்பம் தரிக்கவில்லையோ?>?
இத்தனை நாட்கள் பள்ளிகள் பூட்டப்ட்படிருந்தனவோ?>?
இத்தனை நாட்கள் நெல் விளைய மறந்துவிட்டதோ?>?
இல்லை...
இத்தனை நாட்கள் மருத்துவம் தான் மறந்து போனரோ?>? மருத்துவர்கள்...

பாலூட்டுகிற பிள்ளைக்கு தான், தாய் பாவம் செய்வதுண்டோ!?!
ஏனோ..
பாவத்தில் பதப்படுத்தப்பட்டு பனி கற்களாய்
உறைந்துபோன தலைவர்கள்..
கொள்கைகளை கொளுத்திபோட்டு
குளிர் காயும் மன்னர்கள்...
இவர்களோ மாமனிதர்கள்!!!

என்னில் வழிந்து விழுகிற
துளி வியர்வை அளவும் கூட
கோபம் இல்லை....இவர்மேல்!!!

இவர்களை இன்னும் இதிகாசமாய் புரட்டிப்படிக்கிற
பாவப்பட்ட மக்களே!

உங்கள் அறியாமையை ஒரு நொடி அழைத்து
ஓங்கி ஒரு அரை விடுங்கள்...
அவற்றின் காதுகள் கிழியட்டும்..
இவர்களின் பொய் கூச்சல் கேட்காது போகட்டும்....

புரிந்து கொள்ளட்டும்...

எந்த கலர் டிவி-யும் வாழ்வில் புது கலர் தராது..
அரைக்க தருகிற மிக்சி அரவணைப்பை தராது...

பந்தபஸ்த்து இல்லையென்றால்
பக்கத்து வீட்டிற்கு கூட பத்திரமாய் போக முடியாத
பாவப்பட்டவர்கள்..

ஊழலுக்கு உழைத்ததில் ஒரு மடங்கு
உண்மைக்கு உழைத்திருந்தால்..
உயிரையும் கொடுத்திருப்போம்!!
உயர்வாய் பெருமை பேசி இருப்போம்!!

நடந்தவை மறப்போம்..
இனியாவது இடியட்டும் அறியாமை சுவர்கள்....

உழைத்து வாழ்வதன்றோ வாழ்கை!!
நம்மை நாம் நிமிர்த்திகொள்வோம்!!
தமிழர்கள் உழைக்க பிறந்தவர்கள்..

தமிழனே!! தமிழனாய் வாழு!!

உன் விரல் நுனியில் இடப்படுகிற புள்ளி
"இனி ஒரு விதி செய்யட்டும்"
வாக்களிப்போம்!!!

-அங்கயற்கண்ணி