Wednesday, November 17, 2010

தலைப்பு எதற்கு? செய்தியை படியும்!


உணர்வுகளும் உதிரமும்..
ஒன்றையொன்று உரசிகொள்ளும்...

மனிதர்கள் நாம்..
உயர்ந்தவர்
இதை உணர்ந்தவர்..

இன்று வரை...
நான் எழுப்பிய ஒரே கேள்வி..
எப்படி முளைத்ததிது??
யார் கருவில் பிரந்ததிது?
எவர் மனதில் வளர்ந்ததிது?

பல நூறு ஆண்டுகள்...
வாழ்வதற்கு..
இவன் ஒன்றும் மார்கண்டேயன் அல்ல..

மனிதர்களுக்குள்பிளவு ஏற்படுத்தும்..
இந்த கொடிய மகனுக்கு.
கொடி எதற்கு?
பல நிறம் தான் எதற்கு?

பசி போக்க உணவும்.
அரவணைக்க அன்பும்..
அதிகபட்சம் நமக்கு...

வேண்டா விருந்தாளி இவன்..
விரட்டி அடிப்பதில்
தவறேது?

நூற்றாண்டுகள் பல கடந்தும்..
நம்மை நோகடிக்கிற இவன்..
கடக்கவில்லை இன்னும்..

பணமும், பதவியும்..
பல இருந்தும்..
பற்றி கொண்டே வருகிறான்..
படுக்க வைத்த பின்பும்..

அன்பை நேசிப்போம்..
அன்பை சுவாசிப்போம்..
அன்பை பரிமாறுவோம்..
அன்பிலே மூழ்கிடுவோம்...

இயற்கையை மீறுகிற நியதி..
மக்களை பிளவு படுத்துகிற பாதி..
நம் அறியாமையின் மீதி....
இனியும் தேவயா??
இந்த சாதி??????

இன்னும் பதில் கிட்டா ஒரே கேள்வி!!!-
அங்கயற்கண்ணி

Sunday, November 14, 2010

குழந்தைகள் தினம்!!!


அழுகையிலும்...அதிரடியிலும்
அனைத்திலும்..
அழகு ததும்பும்..கோலம்..
குழந்தைகளின்..குறும்பு!!!

அப்பாவின் விரல் பிடித்து
நடக்கையிலும்..
அம்மாவிடம் வாங்கிய அடி
வலிக்கையிலும்..
செய்ததெல்லாம்..ஒன்றே ஒன்று...

கள்ளம் கபடமில்லா உணர்வின்... ஒட்டு மொத்தம்..

பள்ளிகூடமாக இருக்கட்டும்..
பட்டறையில் வேலையாக இருக்கட்டும்..
பகல் கனவு காண்பதில்..
பரம சந்தோஷம்...

"குழந்தையும் தெய்வமும் ஒன்று!!!"
படித்துள்ளோம் பல முறை,,

ஆயினும்
ஏனோ தெரியவில்லை.
இந்த தெய்வங்களுக்கு தான் நிறைய சோதனை!

பள்ளிகூடங்களிலும், பட்டாசு தொழிலிலும், பத்து பாத்திரத்திலும்..
பஞ்சர் ஒட்டுகையிலும்..


நேரு வே தெரியாத...
குழந்தைகளுக்கு..
எப்படி புரிய வைப்போம்..
இன்று குழந்தைகள் தினம் என்று...


நாம் கொண்டாட்டங்களுக்கு கொடி பிடிக்க தயார்..
அதே சமயத்தில்
பலரின் திண்டாட்டத்துக்கும் முடிவெடுக்க தயாரா நாம்?

இறைவன் படைத்த படைப்பில்..
அருமையானது
குழந்தை பருவம்!!

குறையில்லாத..குற்றமற்ற உள்ளத்தின் உறைவிடம்..

நீயும் நானும் ..
நாட்கள் நகர்ந்து நகர்ந்து நாடு தாண்டி போனாலும்..
மறக்காத பருவம்
குழந்தை பருவம்..

இனி பிறக்காத பருவம்..
நாம் ..
கடந்து வந்த
குழந்தை பருவம்...

குழந்தைகளே...
அறிவு தனை அள்ளி பருகுங்கள்..
ஆசை தனை அனைத்து கொள்ளுங்கள்..
உரிமையை உரக்க கேளுங்கள்..
ஓடி விளையாட ஒரு நாளும் மரவாதீர்கள்..
என்றும் எங்கள் செல்ல பிள்ளைகளே என்பதை உணருங்கள்..
இதோ ஒரு முத்தம்!
அன்போடு வாங்கி கொள்ளுங்கள்!!!

குழந்தைகள் தின நல வாழ்த்துக்கள்!
-அங்கயற்கண்ணி

Thursday, November 11, 2010

கண்ணதாசன்!!! கவியின் தாசன்




கண்ணதாசன்..
கவிதைக்குள் தானே கரைந்தவன்..
கவிதையால் நம்மை கவர்ந்தவன்...
கவிதையாகவே வாழ்வை வாழ்ந்தவன்...

My all tym fav song....
ஓடம் நதியினிலே............
......
யார் மனதில் யார் இருப்பார்..
யார் அறிவார் உலகிலே!!!!!!!!!
:-) :-)

இவர்
இறந்தும் ...
நம்முள் இணைந்திருக்கும்
இதய துடிப்பு!!

-அங்கயற்கண்ணி

Wednesday, November 10, 2010


30 வருட பயணம்...
பல விஷயங்களை கற்றுதந்துள்ளது
பல கனவுகளை நனவாக்கியுள்ளது
பல இளைங்கர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது
பல நெஞ்சங்களை உருக்கியிருக்கிறது
...பல வீடுகளுக்கு விடியலாய் இருந்துள்ளது
பல மனங்களுக்கு ஆறுதலாய் இருந்திருக்கிறது..

பெருமை பட்டு கொள்ளலாம்..
உம் பிறவியும்..
உலகுக்கு உயிரூட்டுகிறது..

பாரத தாயின் அற்புத புதல்வன்!!!
தீபரமனியின் ஆசை மகன்!!!!

புவி ஆள..
தெரியாத தலைவர்களிடம்
திமிராய் கூட சொல்லி கொள்ளுங்கள்!
"நான் இருக்கிறேன்" என்று...

நிஜங்கள் நடக்கட்டும்!
கனவுகள் புதுமை பெறட்டும்!!!
பல கண்ணீருக்கும் பதில் கிடைக்கட்டும்...

கேள்விக்குறி ஆகி போன வாழ்வில்
கேட்டும் கேட்காமல் இருக்கும்
இந்த அரசியல்வாதிகளுக்கு மத்தியில்..
சாதாரண..
சராசரியான ஒருவன்..
சப்தமே இல்லாமல்...
சபைக்கு வருகிறான் என்றால்..
சந்தோஷம்..எம் போன்ற மக்களுக்கு..

நாளை பொழுது விடியாமலே போகட்டும்
என்று எண்ணுகிற எத்தனையோ ஜீவன்களுக்கு
எதார்த்தமாய் கற்றுக்கொடுங்கள்..
இது தான் வாழ்க்கை..
இவ்வளவு தான் வாழ்க்கை...
இப்படி தான் இந்த வாழ்க்கை என்று...

புரிந்து கொள்வார்கள்..

இவ்வளவு அழகானதா?
இந்த வாழ்க்கை என்று..

பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்..........

எங்கள் அனைவரின் அன்பும் அரவணைப்பும்..
என்றும் உங்களுக்கு இருக்கும்......

இனி ஒரு விதி செய்வோம்!!

-அங்கயற்கண்ணி

Thursday, November 4, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்


தித்திக்கும் தீபாவளி
தினசரி ஒலி அல்ல இது..
புது
தினுசான ஒலி!!!

...பிறக்கும் ஒவ்வொரு புது வருடத்திர்க்கும்..
புது காலேண்டரில் விரல் பதிக்கும் போதும்..
நம் அகண்ட கண்கள்
காண விழைவது???
என்று இந்த தீபாவளி?

பல பலக்கும் ஆடை
பட பட பட்டாசு...
பலவகை பலகாரங்கள்..
பகிர்ந்து உன்ன
பக்கத்திலேயே உறவினர்களும் நண்பர்களும்..

எப்படி இனிக்காமல் போகும்,,,,
இந்த அற்புத திருநாள்..

பத்த வைக்கும்
ஒவ்வொரு
பட்டாசும்...
பல கோடி பட்டாம்பூச்சிகளை பரக்கசொல்லும்
ஆனந்தத்தில்..

மஞ்சள் சிறிது தடவி...
ஆடை எடுத்து உடுத்தும் தருணம்...
கம்பீரமும்.....அழகும்..
தானே....ஒட்டி கொள்ளும்...
உடம்பெல்லாம்...

குப்பையே பிடிக்காத நமக்கு
அன்று ஒரு நாள்...
வீட்டின் முன்....
கட்டாயமாக..நம் வீட்டின் முன்...
குப்பை இருந்தால்..
அன்று கோலாகலமான தீபாவளி தான்..

நட்சத்திரங்களை ஒரு நொடி ஒதுக்கி வைத்து..
வான வேடிக்கையை வியந்து பார்ப்பது..
வயது 90 ஆனாலும் தொடருமோ??????

நரகாசுரனுக்கும் நன்றி......

நீ நல்லவனாய் இருந்திருந்தால்....
கிருஷ்ணனுக்கும் வேலை இல்லை...
பள்ளி அலுவலகத்துக்கும் விடுமுறை இல்லை...

இல்லங்கள் இனிக்கட்டும்!!!
இதயம் இனி பறக்கட்டும்!!!
இசை நம்முல் மூழ்கட்டும்!!!
இன்பமே வாழ்வை சூழட்டும்!!!

புன்னகை புரியுங்கள்........

ஒவ்வொரு நாளும்
புதுமை காணுங்கள்...

ஆனந்தமாய் கொண்டாடுங்கள்
இந்த அழகு தீபாவளியை....

அங்கயர்கன்னியின்....அன்பு தீபாவளி நல வாழ்த்துக்கள்!!!!! :-) :-)

ஊழல் !!!!!


மனசாட்சி என்ற ஒன்றை விற்றவனுக்கு
"நியாயம்" என்பது...வெறும்
அனாதை வார்த்தை..
அது என்றும்
ஆதரவு அற்று தான் கிடக்கும்!!!!
...
உன் இறுதி மூச்சுக்கு பின்...
நீ பதுக்கி வைத்த பல கோடியில்..
உன்னை படுக்க வைத்தாலும்..
அதில்..
உனக்கு...
பலனும் இல்லை...
பயனும் இல்லை........

Monday, November 1, 2010

25வது வருட திருமண நாள்!!!!!

I am dedicating this to Dean Natarajan Ji..on his 25th Wedding Anniversary!!!
Long Live!!!

இரு மனங்கள் இணையும் பந்தம்
பல நூறு ஆண்டுகள் நிலைக்க வேண்டும் இந்த சொந்தம்
அட்சதை தூவியும்
வாழ்த்துகள் பாடியும்
வாழை இலையில் பரிமாறியும்
வம்சங்களை கூட்டியும்
அற்புத கோலமாய்
நடந்ததல்லவோ இந்த திருமணம்!

இருபத்தைந்து தொட்டவுடன்
இருதயம் கூட புதுபித்ததாய் தோன்றுகிறது!

இனியவள் கன்னத்தில் இடித்தது கூட...
இன்னும் இனித்து கொண்டு தானே இருக்கிறது!

இசையும், ருசியும், அழகும், ஆர்வமும்
பிட்ஸ்-இன் நினைவும்
கோடி முறை தொட்டு சென்று போயிருந்தாலும்..
திருமண நாள் - என்ற அந்த ஒரு நாள்
திடீர் என்று நினைவை தொட்டு செல்லும் போது!...
ஏனோ...வந்துவிடுகிறது...
அதே பழைய வெட்கம்!

ஆசை மனைவி.
அன்பு மகன்...
நேசத்துக்கும் பாசத்துக்கும் ..
பஞ்சமில்லா இந்த வாழ்கை வாழ..
யாருக்கு தான் வெறுத்து போகும்!

அழகான, அன்பான நடராஜன் அவர்களுக்கு..
ஆசையான FB மக்கள்
என்றுமே பெரிய விசிறி தான்!!!

சலுகை இல்லாமல்..
அள்ளி குடுக்கிறோம் எங்கள் அன்பை!!

மனதார கோடி முறை
வாழ்த்துகிறோம் உங்களை!

25th திருமண நாள் வாழ்த்துக்கள்!

-அங்கயற்கண்ணி