இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!

திநகர் புரசைவாக்கம் பல்லாவரம் குரோம்பேட்
சுத்தி சுத்தி shopping பண்ண காலம்
காசு கம்மியா இருந்தாலும் கடனை உடனை வாங்கியாச்சும்
அன்னைக்கு பொழுதுக்கு தயாராக நாம பன்ற அலப்பறையே
தனி அழகு !!
முறுக்கு அதிரசம் சோமாசு ரிப்பன் பக்கோடா
ஜிலேபி குலாப் ஜாமுன் ரவா லட்டு அச்சு முறுக்கு
வாசனை வீடெல்லாம் நிரம்பி இருக்கும்
கிச்சன் ல கால் வெக்க முடியாது
பரவி கெடக்கும் பலகாரமும் எண்ண சட்டியும்
பிரிச்சு பாத்து பிரிச்சு பாத்து போர் அடிக்காத பட்டாசு ஒருபக்கம்
காலைல 9 மணிக்கு பட்டி மன்றம் இன்னொரு பக்கம்
மசாஜ் சென்டர் ஆகி போன வீடு ஒருபக்கம்
மட்டன் பிரியாணி வாசன இன்னொரு பக்கம்
10 தவுசண்ட் வாலாவா Tinல குருவி வெடியா
கொழப்பத்திலே ஒரு பக்கம் பிஜிலி count கொறையும்
ஓட்டையாகாத புது dressஓ
கங்கு படாத கன்னமோ இருக்க முடியாது
உச்சந்தலைல வெச்ச எண்ணெயும்
காலைல சாப்ட எட்டு இட்லியும்
சொர்க்கத்தையே கண்ல நிக்க வெச்சு தாலாட்டும்
இருந்தாலும் லட்சுமி வெடிய நடு ரோட்ல வெச்சா
என்னைக்கும் காலியா இருக்க ரோட்ல
அன்னைக்குத்தான் பதினெட்டு Cycleஉம் பன்னண்டு Autoஉம்
கிராஸ் பண்ணி போகும்
பாதி மனசு டிவிலயும்
மீதி மனசு வெடிலயும் அலைபாயும்
எல்லாம் முடிஞ்சு பொழுது சாஞ்சா
Color Colorஆ பட்டாடை கொஞ்சும்
Costly வெடி கண்ண உருத்தும்
ஒரே Shotல ஓஹோன்னானா!!!!
Correct ஆ நேரம் பாத்து கூட்டம் பாத்து
ஒத்த வெடி வானையே அலங்கரிக்கும்
இப்போ தாண்டா "தீபாவளி" ன்னு மனசுக்குள்ள எல்லா பூச்சியும் ரவுண்டு அடிக்கும்
வாங்கின கடனோ
வாடகை Cycle ஓ
வேலையோட அலுப்போ
வாழ்க்கையோட சலிப்போ
எல்லாமே அந்த வானவேடிக்கைல கரைஞ்சு போகும்
இதுவும் கடந்து போகும்
விடிந்ததும் பழைய வாழக்கை வந்தும் தொலையும்!!!
ஆக இந்த ஒரு நாள் எவ்ளோ Maximum என்ஜாய் பண்ண முடியுமோ பண்ணிக்குவோம் !!!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!!
அங்கயற்கண்ணி அ ச