
இணையத்தளத்தில் ஒரு புரட்சி!!!
இனியும் இருக்க போவதில்லை வறட்சி!!!
காணப்போகிறோம் புது வளர்ச்சி!!!
கணினியும் கையுமாய் இருப்பவர்கள்
கருணையும் மெய்யுமாய் மாறுகிறார்கள்!!!
ஒருவன் வைத்த காலடி...
ஒரு கோடி மக்களும் ஒன்று கூடி...
ஒரே குறிகோளுக்காய்!!!
வறண்ட மக்களின் வயிற்றுக்காய்!!!
தினசரி சோற்றுக்காய்!!!
திரண்டு வந்ததன் மாயம்!!!
அதுவே மனித நேயம்!!!
அடுத்த சந்ததியினர்
அறிய வேண்டாம்
'பட்டினி'
என்ற வார்த்தையை....
ஒன்று கூடுவோம்!!!
'இறைவனும்'
நம்முடன் இணைய
ஒரு இடம் கொடுப்போம்!!!
வாழ்க நம் அழகு பாரதம்!!!!
-அங்கயற்கண்ணி